'பிரதேச கலைஞர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் நல்லதொரு முயற்சி ''பற்று' சஞ்சிகை வெளியீட்டில் சிரேஸ்ட்ட சமூகசேவை உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அலியார்
(ஜெ.ஜெய்ஷிகன்)
கோறளைப்பற்று- வாழைச்சேனை பிரதேசசெயலகம் மற்றும் சமூகபராமரிப்பு நிலையத்தின் வெளியீடான 'பற்று' சஞ்சிகை வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கடந்த வாரம்; சிறப்பாக வெளியீடு செய்யப்பட்டது.
உதவிப்பிரதேச செயலாளர் திருமதி. நிருபா பிருந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு 'பற்று' சஞ்சிகையை வெளியீட்டு வைத்தார். பின்னர் பற்று சஞ்சிகையின் ஆசிரியர் க.ஜெகதீஸ்வரன் முதற் பிரதியை திருமதி.நிருபா பிருந்தன் அவர்களிடம் வழங்கி வைக்க பின்னர் பிரதம அதிதியால் விசேட அதிதிகளாக கலந்து கொண்ட தலைமையக சிரேஸ்ட சமூகசேவை உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அலியார் மற்றும் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் சா.அருள்மொழி, சமூகசேவை உத்தியோகத்தர்களான அ.நஜீம், திருமதி.சி.சிவநாயகம், மாவட்ட செயலக முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் விஸ்வகோகிலன் ஆகியோருக்கு பற்று சஞ்சிகையின் முதற் பிரதிகளை சம்பிரதாயபூர்வமாக வழங்கியிருந்ததும் குறிப்பிடத் தக்கது.
பிரபல எழுத்தாளர் கறுவாக்கேணிமுத்து மாதவன் 'பற்று' சஞ்சிகையின் நயவுரையை நிகழ்த்தினார்.
சமூகசேவைத் திணைக்களத்தின் சேவைகளை ஆவணப்படுத்துவதும் பிரதேச கலைஞர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் நல்லதொரு முயற்சியாக 'பற்று' சஞ்சிகை வெளிவருவது பாராட்டுக்குரியது என சிரேஸ்ட்ட சமூகசேவை உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அலியார் தனதுரையில் சுட்டிக்காட்டினார்.