அன்றொரு நாள்
ஆலய வளவுக்குள்
உன்னை சந்தித்த நினைவுகள்
இன்றும்
கடல் அலையாய்
ஆர்ப்பரித்து உயிர்க்கிறது
மடி தேடும் கன்றின்
கதறலாய்
ஓங்கி ஒலிக்கிறது
எட்டுத் திக்கெங்கும்
என் காதல் பாடல்
உன் உயிர்ப் பூவின்
வாசனை நான்
என் அடி வேரின்
ஆதாரம் நீ
கன்னத்தில் வடியும்
உன் முடி ஊதி
மெல்லக் காது மடல் கடித்து
அடர்ந்து படர்ந்திருக்கும்
உன் கூந்தல் காட்டுக்குள்
பிடறி வழியே
என் கரம் நுழைத்து
மெல்லப் பற்றி
உன் திருமுகம் திருப்பி
உதடு வழியே
உயிர் குடித்து
ஊறும் வியர்வை முகர்ந்து
சிகிரியா ஓவியமாய்
சிதறிக் கிடந்த உன்னை ரசித்து
விழி மாறும்
ஒளித் தெறிப்பில்
கண் மலர்ந்து நீ
கிறங்கிக் கிடக்கையிலே
காமத்தின் கண் சொறுகி
நான் விழுந்து
அலைவதற்கும்
கலைவதற்கும்
இடை நடுவே
நீ -
வெட்கித்த அந்த
தேவ நிமிஷத்தில்
ஓராயிரம் வருட
தவத்தின் பயன்
என் காலடியில்
வீழ்ந்து பட கிடக்கிறது
ஜென்மாந்திர பந்தங்களுடன்.
- மைக்கல் கொலின் -
ஆலய வளவுக்குள்
உன்னை சந்தித்த நினைவுகள்
இன்றும்
கடல் அலையாய்
ஆர்ப்பரித்து உயிர்க்கிறது
மடி தேடும் கன்றின்
கதறலாய்
ஓங்கி ஒலிக்கிறது
எட்டுத் திக்கெங்கும்
என் காதல் பாடல்
உன் உயிர்ப் பூவின்
வாசனை நான்
என் அடி வேரின்
ஆதாரம் நீ
கன்னத்தில் வடியும்
உன் முடி ஊதி
மெல்லக் காது மடல் கடித்து
அடர்ந்து படர்ந்திருக்கும்
உன் கூந்தல் காட்டுக்குள்
பிடறி வழியே
என் கரம் நுழைத்து
மெல்லப் பற்றி
உன் திருமுகம் திருப்பி
உதடு வழியே
உயிர் குடித்து
ஊறும் வியர்வை முகர்ந்து
சிகிரியா ஓவியமாய்
சிதறிக் கிடந்த உன்னை ரசித்து
விழி மாறும்
ஒளித் தெறிப்பில்
கண் மலர்ந்து நீ
கிறங்கிக் கிடக்கையிலே
காமத்தின் கண் சொறுகி
நான் விழுந்து
அலைவதற்கும்
கலைவதற்கும்
இடை நடுவே
நீ -
வெட்கித்த அந்த
தேவ நிமிஷத்தில்
ஓராயிரம் வருட
தவத்தின் பயன்
என் காலடியில்
வீழ்ந்து பட கிடக்கிறது
ஜென்மாந்திர பந்தங்களுடன்.
- மைக்கல் கொலின் -
