(க.ஜெகதீஸ்வரன்)
தாயகச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
கனடா செய்திகள்
உலகச் செய்திகள்
கட்டுரைகள்
கலை இலக்கியம்
சினிமா செய்திகள்
Wednesday, February 4, 2026
கல்குடா வலயக்கல்வி அலுவலகத்தில்78 ஆவது சுதந்திர தின நிகழ்வு அனுஸ்டிப்பு
Monday, January 26, 2026
ஓய்வூதியத்தை எதிர்பார்த்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றமாம்
(கஜென்)
கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் 2026 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இடமாற்ற கட்டளை தொடர்பான கலந்துரையாடல் நேற்று முன்தினம் (25) களுவாஞ்சிக்குடியில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் அபுசாலி முஸம்மில் தலைமையில் நடைபெற்றது. 2005ஆம் ஆண்டு நியமனம் பெற்று 21 வருடங்களாக சேவையாற்றி ஒய்வு பெறப்போகும் தருவாயில் திருகோணமலைக்கு அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த 44 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்குஇடமாற்றம் வழங்கப்பட்டது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் தொடர்பாக அதிர்ச்சியுற்றுள்ளதாக மட்டக்களப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் ஊடகங்களிடம் களுவாஞ்சிகுடியில் ஒன்றுசேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் தொடர்பாக கடந்த 21வருடமாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும் யுத்த காலத்தில் கடமையாற்றி தற்போது ஐம்பது வயதை கடந்த நிலையில் இவ்வாறு வழங்கப்பட்டஇடமாற்றம் தமக்கு உளவியல்இ உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கவலை தெரிவித்தனர்.
குறித்த விடயம் பிரதம செயலாளருடன் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் சாதகமான பதில் கிடைக்காதபட்சத்தில் சட்ட ரீதியாக குறித்த இடமாற்றத்தை அணுகுவது தொடர்பில் பிரசித்தமான சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, January 24, 2026
தேசிய கலை இலக்கிய விழாவில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலை மாணவி சாதனை
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த “தேசிய இலக்கிய விருது வழங்கல் - 2024“ 2026 ஜனவரி மாதம் 24 ஆம் திகதி, சனிக்கிழமை (இன்று) மு.ப. 10.00 மணிக்கு பத்தரமுல்லையில் உள்ள சுஹுருபாய இல் உள்ள பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
Saturday, March 15, 2025
கல்குடா கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் முத்தாரம் இசை, நடன நிகழ்வு

கல்குடா கல்வி வலயத்தின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்
(க.ஜெகதீஸ்வரன்)
கல்குடா கல்வி வலயத்தின் இணையத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் தருமரெத்தினம் அனந்தரூபன் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
வலயத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் திட்டமிடல் பிரதிக்கல்விப் பணிப்பாளர் T. இதயகுமார் இணையத் தளத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
குறித்த இணையத்தளத்தில் கல்குடா கல்வி வலயத்தின் பாடசாலைகள் தொடர்பிலான விபரங்கள் மற்றும் அதிபர்கள்> ஆசிரியர்கள்> மாணவர்கள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வதுடன் வலயத்தின் கல்வி அடைவுகள் தொடர்பிலான தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும். இணையத் தளத்தைப் பார்வையிட https://www.kalkudahzone.edu.lk/index.php கிளிக் செய்யவும்








.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)



















