
தாயகச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
கனடா செய்திகள்
உலகச் செய்திகள்
கட்டுரைகள்
கலை இலக்கியம்
சினிமா செய்திகள்
Saturday, March 15, 2025
கல்குடா கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் முத்தாரம் இசை, நடன நிகழ்வு

கல்குடா கல்வி வலயத்தின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்
(க.ஜெகதீஸ்வரன்)
கல்குடா கல்வி வலயத்தின் இணையத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் தருமரெத்தினம் அனந்தரூபன் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
வலயத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் திட்டமிடல் பிரதிக்கல்விப் பணிப்பாளர் T. இதயகுமார் இணையத் தளத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
குறித்த இணையத்தளத்தில் கல்குடா கல்வி வலயத்தின் பாடசாலைகள் தொடர்பிலான விபரங்கள் மற்றும் அதிபர்கள்> ஆசிரியர்கள்> மாணவர்கள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வதுடன் வலயத்தின் கல்வி அடைவுகள் தொடர்பிலான தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும். இணையத் தளத்தைப் பார்வையிட https://www.kalkudahzone.edu.lk/index.php கிளிக் செய்யவும்
Friday, February 21, 2025
சிவ வித்தியாலயத்தில் பாராளுமன்றத் தேர்தல்
(க.ஜெகதீஸ்வரன்)
இலங்கை நாட்டின் ஜனநாயக அரசியல் பாரம்பரியங்களை மாணவர்கள் மத்தியில் பாடசாலைக் காலத்திலேயே அறிமுகப்படுத்துவதும் சிறந்த அரசியல் தலைவர்களை பாடசாலைக் காலத்திலேயே உருவாக்குவதும் இதன் பிரதான நோக்கமாகும். அதனூடாக பாராளுமன்ற நடைமுறைகளின் ஊடாக தேர்தல் பிரசாரப் பணிகள், வாக்களிப்பது எப்படி, வாக்குச்சாவடியினுடைய அமைப்பு, வாக்களிக்கும் முறைமை, வாக்கெண்ணல், பிரதிநிதிகளைத் தெரிவு செய்தல் போன்ற ஜனநாயகப் பண்புகளை மாணவர்களுக்கு நடைமுறை அனுபவங்களைப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாக நாட்டில் சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு குறித்த தேர்தல் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் தெ.ஜெயப்பிரதீபன் தேர்தல் ஆணையாளராகவும் பாடசாலையின் ஆசிரியர்கள் சிரேஸ்ட தலைமை தாங்கும் அதிகாரிகள், தேர்தல் நோக்குனர்களாகவும் மாணவர்கள் வேட்பாளர்களாகவும் பங்குபற்றியிருந்தனர். குறித்த தேர்தலினூடாக நடைமுறை அரசியலைக் கற்றுக் கொள்வதும் சிறந்த தலைமைத்துவத்தை பாடசாலையினூடாக வழங்குவதுமே இதன் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
Monday, February 17, 2025
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு உதவி வழங்கல்
வித்தியாலய அதிபர் சிவலிங்கம் இந்திரன் தலைமயில' நடைபெற்ற நிகழ்வில் கல்குடா வலயக் கல்வி அலுவலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், கதிரவெளி கனிஸ்ட வித்தியாலய அதிபர் பி.இராமச்சந்திரன், ஊடகவியலாளர்களாக ந.குகதர்சன், எஸ்.ஏ.ஸ்ரீதர், சமூக செயற்பாட்டாளர் அ.வாசுதன், கல்வி கற்பித்த திருமதி. நிலாந்தினி விஜிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாகரை வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் ஜெகதீஸ்வரன் அபிஷ்னன் 143 புள்ளிகளையும், நவக்குமார் டிலுக்ஷிக்கா 143 புள்ளிகளையும், ரகுக்குமார் ஷக்சனா 142 புள்ளிகளையும் பெற்று சித்திபெற்ற மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது கனடா நாட்டில் வசிக்கும் தொழிலதிபரும், சமூகசேவையாளரும், ஊடகவியலாளருமான திருமதி.ரேகா சிவாவின் நிதி அனுசரணையில் குறித்த மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
Saturday, January 4, 2025
கல்குடா வலயக்கல்வி அலுவலகத்தில் 'கிளீன் ஸ்ரீலங்கா' புதுவருட ஆரம்ப நிகழ்வு
(க.ஜெகதீஸ்வரன்)
புதிய ஆண்டுக்கான கடமைகளை வைபவ ரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று 2025.01.01ஆம் திகதி வலயக்கல்வி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
வலயக்கல்விப் பணிப்பாளர்; தருமரெத்தினம் அனந்தரூபன தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கடமைகளை ஆரம்பிக்குமுகமாக காலை 8.30 மணிக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் தேசியகொடியை ஏற்றி வைத்ததுடன் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. உத்தியோகத்தர்கள் அனைவரும் 'தூய்மையான இலங்கை' திட்டத்துடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
அரசாங்கத்தின் புதுமையான திட்டங்களான வறுமையை தணித்தல், டிஜிட்டல் ஸ்ரீலங்கா, க்ளீன் ஸ்ரீலங்கா ஆகிய எண்ணக் கருக்களை உள்ளடக்கிய சிறப்புரையினை வலயக்கல்விப் பணிப்பாளர் நிகழ்த்தினார்.
பின்னர் அலுவலகத்தின் பிரதான மாநாட்டு மண்டபத்தில் கல்குடா கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலைகளில் 2025ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்வரும் வருடங்களில் கல்வி அடைவு மட்டத்தை தேசிய மட்டத்தில் உயர்த்துவதற்கு கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் எனக் குறிப்பிட்டார். அத்துடன் புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
குறித்த நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், உதவிக்கல்விப்பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர்கள், உத்தியோகத்தர்கள்; உள்ளிட்ட பலர்; கலந்து கொண்டதுடன் சிற்றுண்டிகளும் பரிமாறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Friday, July 19, 2024
இறாலோடையில் நடமாடும் சேவை
(ஷோபனா)
Living child development centre திட்டத்தின் ஏற்பாட்டில் திட்டத்தில் உள்ள குடும்பங்களுக்கும் பொது மக்களுக்குமான நடமாடும் சேவை ஒன்று Living christian Assembly church Eralodai மண்டபத்தில் இடம்பெற்றது.
Living child development centre தலைமையில் இடம்பெற்ற மேற்படி நடமாடும் சேவையை வாகரை பிரதேச செயலகத்தின் அதிகாரிகளை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த நடமாடும் சேவையில் பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவு, தேசிய அடையாள அட்டைக்காக முதன் முறையாக விண்ணப்பித்தல், தொலைந்த அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தல், போன்ற பிரிவுகளில் மக்களுக்கு சேவைகள் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நடமாடும் சேவையில் கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமாதான நீதவான், பதிவாளர், ஆகியோர் தங்களது சேவைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.